கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
கடலூர்:
கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி 30 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (21.11.2013) அன்று நடந்தது.
கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார். பேராசிரியர் கண்ணன் வாழ்த்திப் பேசினார். விழாவில், எம்.பி.,யின் செய்தி தொடர்பாளர் குமார், விவசாய பிரிவு வேலுச்சாமி, எம்.பி.,யின் தலைமை நிலையச் செயலர் ரங்கமணி, ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ரவிக்குமார், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி அழகிரி எம்.பி. பேசியது:
பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ஜப்பான், சீனா போன்ற நாடுகள் விண்கலம் அனுப்ப முடியாத நிலையில், இந்தியா அனுப்பியுள்ளது. இது மகத்தான சாதனை என்றாலும், இந்தியா மேலும், வளர்ச்சி அடைய வேண்டும்.
வளர்ச்சி என்பது கல்வி சார்ந்த பள்ளி, கல்லூரிகளில் இருந்து துவங்க முடியும். அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால், ஈரானில் கச்சா எண்ணெயை வாங்கும் திறன் எந்த நாட்டிற்கும் கிடையாது.
அமெரிக்காவிற்கு ஆற்றல் எங்கிருந்து வந்தது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் விஞ்ஞானிகள் எண்ணிக்கை குறைவு. ஆனால், அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மனிதனின் சக்திக்கு ஆற்றல் குறைவு. தவறான சிந்தனைகளால் கவனம் சிதறக் கூடாது.
தோல்வி எங்கிருந்து துவங்குகிறது என்பதை மாணவர்கள் ஆராய வேண்டும். சிறிய சிறிய விஷயங்களைப் பார்த்து கவனத்தைச் சிதற விடுகின்றனர். விவேகானந்தர் கூறியது போல், மாணவ, மாணவிகள் எதையும் படித்து சாதிக்க முடியும். வலிமை, அன்பு உள்ளவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும். மாணவர்கள் ஆக்கப்பூர்வமான சக்தியாக மாற வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக