வியாழன், 20 அக்டோபர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

கடலூர்:

            ஓட்டுப்பதிவு செய்த மின்னணு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக வைத்துள்ள ஓட்டு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

            உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்டமாக நேற்று கடலூர், சிதம்பரம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும், ஒன்றியங்களில் ஓட்டு சீட்டுகளும் ஓட்டுப் பதிவிற்கு பயன்படுத்தப்பட்டன. மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்ததும் அந்தந்த ஓட்டுச் சாவடிகளில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு ஓட்டுப் பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன.

ஓட்டுபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் விவரம்:

நகராட்சி: 

கடலூர் -  டவுன்ஹால், கடலூர். 
சிதம்பரம் - ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம்.

பேரூராட்சி: 

குறிஞ்சிப்பாடி, வடலூர் - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி. திட்டக்குடி - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திட்டக்குடி.
ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு - டி.ஜி.எம்.மேல்நிலைப் பள்ளி, சேத்தியாத்தோப்பு. 
காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை - பர்வதராஜகுல குருகுல மேல்நிலைப் பள்ளி - காட்டுமன்னார்கோவில். 
அண்ணாமலை நகர் - ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலை நகர். 
புவனகிரி, பரங்கிப்பேட்டை - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - புவனகிரி. கிள்ளை - அரசு மேல்நிலைப் பள்ளி, கிள்ளை.

ஒன்றியம்: 

கடலூர் - பெரியார் அரசு கல்லூரி, தேவனாம்பட்டினம். 
 குறிஞ்சிப்பாடி - எஸ்.கே.வி. மெட்ரிக் பள்ளி, குறிஞ்சிப்பாடி. 
மேல்புவனகிரி - சந்திரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்தியாத்தோப்பு. பரங்கிப்பேட்டை - அரசு கல்லூரி, சி.முட்லூர். 
கீரப்பாளையம் - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
 சிதம்பரம். குமராட்சி - நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 
சிதம்பரம். காட்டுமன்னார்கோவில் - ஆ.சி.மேல்நிலைப்பள்ளி, 
காட்டுமன்னார்கோவில். 

               மாவட்டத்தில் உள்ள 34 உள்ளாட்சி அமைப்புகளில் இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப் பெட்டிகள் 27 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் நேற்று மாலை முதல் ஒவ்வொரு மையத்திற்கும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள், 4 சப் இன்ஸ்பெக்டர், 100 போலீசார் மூன்றடுக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP