கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராஜா வாக்கு சேகரிப்பு
கடலூர்:
கடலூர் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராஜா பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.
புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கினார். ஆசிரியைகளிடம் தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். பெரியார் அரசு கலைக்கல்லூரி, புனித வளனார் கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி, ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் வாக்கு சேகரித்தார். சுரக்கல்பட்டு புனித அந்தோனியார் கோயிலுக்கும் சென்று கிறிஸ்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, நகராட்சித் தலைவர் து.தங்கராசு. முன்னாள் நகராட்சித் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோரும் வேட்பாளருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக