கடலூர் பெரியார் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் தமிழக வரலாற்றுப் பேரவை கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தனர்
கடலூர் :
கடலூர் அரசு கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் தமிழக வரலாற்றுப் பேரவை கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.
தமிழக வரலாற்றுப் பேரவையில் ஆண்டு கருத்தரங்கு ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் கடந்த 30ம் தேதி முதல் 2ம் தேதி வரை நடந்தது. இக்கருத்தரங்கில் கடலூர் பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர்கள் பிரபா, தெய்வாம்சம், விஜயலட்சுமி, சேதுராமன் ஆகியோர் "தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள், "பெண்களும் அவர்களின் விவசாயப் பணிகளும்', "புதுச்சேரி தமிழ் சமூகத்தின் மீது இலக்கிய சங்கங்களின் தாக்கம்' கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள்', "ஹிலாரி கிளிண்டனின் இந்தியா வருகையும் இந்திய - அமெரிக்க உறவுகளின் மீது அதன் தாக்கமும்' என்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தனர்.
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் செல்வமுருகன், முத்தமிழ்ச்செல்வன், சுவாமிமலை, ஆனந்தராஜ் ஆகியோர் துறை பேராசிரியர் காந்திமதி வழிகாட்டுதலுடன் முறையே திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டுச் செய்திகள், வில்லியனூர் காமீஸ்வரர் கோவில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் சிறப்புகள் ஆகிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தனர்.
கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த வரலாற்றுத் துறை மாணவர்களை கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி, வரலாற்றுத் துறை தலைவர் (பொறுப்பு) பேராசிரியர் ராயப்பன் ஆகியோர் பாராட்டினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக