கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
கடலூர்:
கடலூரில் 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு, கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரிச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. எனவே அந்த 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், இக்கல்லூரியில் உள்ள அறைகளில் வைத்து பூட்டி, சீல் வைக்கப்பட்டு உள்ளன. கல்லூரி வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கடந்த 20-ம் தேதி இக்கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவருக்குக் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரிவுபசார விழா, அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதுமுதல் கல்லூரி வளாகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கல்லூரிச் சாலையின் இரு கோடியிலும், போலீஸ் தடுப்புக் கட்டைகள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு 24 மணி நேரமும் கூடுதலாக போலீஸôர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் சில்வர் பீச்சுக்குச் செல்லும் பொதுமக்கள், நேராக கடற்கரைக்குச் செல்லாமல், மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக