கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.வேட்பாளர்கள் பார்வை
கடலூர் :
கடலூர் ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ள அறையை குறிஞ்சிப்பாடி, நெய்வேலி அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று பார்வையிட்டனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி மற்றும் பண்ருட்டி ஆகிய தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் நேற்று மாலை குறிஞ்சிப்பாடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி வேட்பாளர் சிவசுப்ரமணியன் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் இருந்த கட்சித் தொண்டர்களிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர். உடன் தொழிற்சங்கச் செயலர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள் கோவிந்தராஜ், கமலக்கண்ணன், பழனிசாமி, தொகுதி செயலர் வெங்கடாஜலபதி, ஜெ.,பேரவை ஒன்றிய செயலர் வீரமணி உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக