புதன், 18 ஆகஸ்ட், 2010

ஆசிரியர்களைக் கண்டித்து வகுப்பறைகளை புறக்கணித்த பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள்

கடலூர்:

             ஆசிரியர்களைக் கண்டித்து கடலூர் பெரியார்  கலைக் கல்லூரி மாணவர்களில் ஒரு பகுதியினர், செவ்வாய்க்கிழமை வகுப்புகளை விட்டு வெளியேறினர். 

                இதே கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்தவர் ராஜ்குமார். வெங்கடாம்பேட்டை வடக்குத் தெரு காலனியைச் சேர்ந்தவர். அவர் கடந்த 9-ம் தேதி தனது ஊரில் இருந்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். இதற்கு ஆசிரியர்கள் இரங்கல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்குக் கண்டனம் தெரிவித்தும், தகுதி வாய்ந்த கௌரவ  விரிவுரையாளர்களை 2-ம் சுழற்சி வகுப்புகளுக்கு நியமிக்க வேண்டும். மாணவர்களிடையே ஜாதி உணர்வை தூண்டுவோர், மற்றும் மாணவர்களிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளும் ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

                        இதற்காக ஒரு பகுதி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்பறைகளை விட்டு வெளியேறினர். அவர்களைக் கல்லூரி முதல்வர் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மற்ற வகுப்புகள் வழக்கம்போல் செயல்பட்டன.



Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

கடலூர் பெரியார் கலைக் கல்லூரிக்கு 1 லட்சம் நிதி: கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன்

கடலூர்:
 
           கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தனது சொந்த நிதியில் இருந்து | 5 லட்சத்தில், கல்லூரி மற்றும் பள்ளிகளில் அறக்கட்டளைகளை உருவாக்கி இருக்கிறார். கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் செம்மொழித் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழாவும், பேச்சுக் கலைப் பயிலரங்கமும் வியாழக்கிழமை நடந்தது.

விழாவில் அய்யப்பன் எம்எல்ஏ பேசுகையில், 

              "இக்கல்லூரியில் விழாக்கள் நடத்தி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் வகையில், "டாக்டர் கலைஞர் தமிழ் செம்மொழி அறக்கட்டளை' என்ற அமைப்பை உருவாக்கி, அதற்குத் தேவையான நிதி | 1 லட்சத்தைத் எனது சொந்த நிதியில் இருந்து வழங்குகிறேன்' என அறிவித்து, அந்தத் தொகையை உடனேயே வழங்கினார். 

            மேலும் கடலூர் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முதுநகர் பிலோமினாள் மேல்நிலைப் பள்ளி, கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கும், தலா | 1 லட்சத்தை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி, டாக்டர் கலைஞர் தமிழ் செம்மொழி அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அய்யப்பன் தெரிவித்தார். 

                கல்லூரி விழாவுக்கு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழாழி கொற்கை வேந்தன் தலைமை வகித்தார். விழாவை கல்லூரி முதல்வர் பேராசிரியர் ரங்கநாதன் தொடங்கி வைத்தார். புதுவை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் இளங்கோ சிறப்புரை நிகழ்த்தினார் .பேராசிரியர் அர்த்தநாரி வரவேற்றார். முனைவர் குமரன் நன்றி கூறினார்.

Read more...

வெள்ளி, 9 ஜூலை, 2010

ஆசிரியர்களே இல்லாத கடலூர் பெரியார் கலைக் கல்லூரி... மாணவர்கள் தவிப்பு


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தும் கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்.
டலூர்:

             தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் 2-வது ஷிஃப்ட் (2-வது சுழற்சி வகுப்புகள்) மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றித் தவிக்கிறார்கள். தமிழகத்தில் 69 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் கடந்த 3 ஆண்டுகளாக 2-வது ஷிஃப்ட் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 60 ஆயிரம் மாணவ,  மாணவிகள் படிக்கிறார்கள். கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மட்டும் 1,000 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.2-வது ஷிஃப்ட் கல்லூரிக்கு ஆண்டுதோறும் தாற்காலிக ஆசிரியர்களை ( கௌரவ  விரிவுரையாளர்கள்) அரசு நியமிக்கிறது. மார்ச் மாதத்தில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு பணிபுரிந்த 600 கெüரவ விரிவுரையாளர்களும் மார்ச் மாதத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கடந்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்கியதும், அதற்கு முந்தைய ஆண்டு பணிபுரிந்த  கௌரவ  விரிவுரையாளர்களை, ஜூன் மாதத்தில் பணிக்கு வந்துவிடுமாறும், பணியாணை பின்னர் வழங்கப்படும் என்றும் வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் கடந்த ஆண்டு மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல், தொடக்கத்திலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி கல்லூரி வகுப்புகள் தொடங்கி விட்டன. ஆனால் 2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கு, ஆசிரியர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை. இதனால் வகுப்பறைகள், ஆசிரியர்கள் இன்றி காணப்படுகின்றன.

இது குறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பழநி கூறுகையில்,

           "2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கு, ஆண்டுதோறும் கெüரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவதும், ஆண்டு இறுதியில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதுமாக உள்ளனர். இதனால் கல்வி ஆண்டு தொடக்கத்தில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் நிலை உள்ளது. கடந்த கல்வி ஆண்டில் வாய்மொழி உத்தரவைப் பெற்று, முந்தைய ஆண்டில் பணிபுரிந்த அனைத்து கெüரவ விரிவுரையாளர்களும், ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்கும் போதே பணிக்கு வந்து விட்டனர். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு வாய்மொழி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் கெüரவ விரிவுரையாளர்கள் யாரும் இன்னமும் பணிக்கு வரவில்லை. எனவே இனிமேல்தான் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் குறித்து, கல்லூரிக் கல்வி இயக்குநரின் உத்தரவு வரவேண்டும். இது குறித்து கல்வித் துறைச் செயலரை புதன்கிழமை சந்தித்துப் பேசி இருக்கிறோம். எங்களது சங்கம் மேற்கொண்ட முயற்சியால், கெரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ. 4 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, 2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கும் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அரசிடம் வற்புறுத்தி வருகிறோம் என்றார். 2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இன்னமும் நியமிக்கப்படாததால், ஆங்காங்கே கல்லூரி மாணவ மாணவியர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆசிரியர்கள் நியமிக்கப்படாததைக் கண்டித்து, கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியர் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

செவ்வாய், 29 ஜூன், 2010

பெரியார் கல்லூரியில் கவுன்சிலிங் நடப்பதாக மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு

கடலூர்: 

              கவுன்சிலிங் நடப்பதாக கிடைத்த தவறான தகவலால் கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

               கடலூர் பெரியார் கலைக் கல்லுரியில் 2010-2011ஆம் கல்வியாண்டிற் கான கவுன்சிலிங் முதல் கட்டமாக 17, 18ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 21, 22ம் தேதியும் நடந்தது. இதில் பி.எஸ். சி., பி.காம், பி.ஏ., உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தமுள்ள 881 இடங் களுக்கு 4,329 பேர் விண்ணப்பித்தனர். அதில் 684 மாணவ, மாணவிகள் கவுன்சிலிங் மூலம் சேர்க்கப் பட்டனர்.இந்நிலையில் பெரியார் கல்லூரில் நேற்று மீண்டும் கவுன்சிலிங் நடப்பதாக கூறி 300க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வந்திருந்தனர். இந்நிலையில் கல்லூரியில் இன்று மாணவர்கள் சேர்க்கை இல்லை என போர்டு எழுதி வைக்கப்பட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்களும் கல்லூரி முன் திரண்டனர்.

              இதனையடுத்து அங்கு வந்த கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் இன்று (நேற்று) மாணவர்கள் சேர்க்கை இல்லை. எனது தலைமையில், பேராசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தப் பட்டு மாணவர்கள் சேர்க்கைக் கான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார். இதனையடுத்து மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து முதல்வர் ரங்கநாதன் கூறுகையில், "

                  இரண்டு கட்ட கவுன்சிலிங் நடந்துள்ளது. இரண் டாம் கட்ட கலந்தாய்வில் தேர்வு செய்யப்படாத மாணவர்களுக்கு வரும் 28ம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான தேதி பின்னர் கூறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தவறாக புரிந்து கொண்ட மாணவர்கள் இன்று (நேற்று) கலந்தாய்வு நடக்கும் என கல்லூரிக்கு பெற்றோருடன் வந்திருந்தனர். மேலும் இதுவரை எம்.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளது. மேலும் பி.சி., பிரிவு மாணவர்களுக்கு 200 இடங் கள் காலியாக உள்ளன. கலந் தாய்வு கூட்டத்திற்குப் பின் பி.சி., மாணவர்கள் வரவில்லை எனில் அவர்களுக்கு பதில் எம்.பி.சி., - எஸ்.சி., உள்ளிட்ட மாணவர்களுக்கு சேர்க்கை இடம் பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்படும்' என்றார்.


Read more...

வியாழன், 17 ஜூன், 2010

கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவக்கம்

கடலூர்: 

               கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது.

கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                 கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2010-2011ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு இன்றும், நாளை 18ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 21 மற்றும் 22ம் தேதி நடக்கிறது. 

                  இன்று காலை துவங் கும் முதல் கட்ட கலந் தாய்வில் பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், விலங்கியல், தாவரவியல் பாடங்களுக்கும், நாளை 18ம் தேதி பி.காம்.,- பி.ஏ., தமிழ் இலக்கியம், ஆங் கில இயக்கியம், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கும் நடக்கிறது. பிளஸ் 2 பொது பாடப்பிரிவில் பகுதி மூன் றில் 800க்கு 500 மதிப் பெண்களுக்கு மேல் பெற்றவர்களும், தமிழ், ஆங்கில இலக்கியம் பாடப் பிரிவிற்கு மொழிப் பாடத்தில் 200க்கு 120 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இக்கலந் தாய்வில் பங்கேற்கலாம். இதற்கான அழைப்பு கடிதம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட பாடத்திற்கு விண்ணபித்து கடிதம் கிடைக்காதவர்கள் கலந் தாய்வு நடக்கும் நாட்களில் காலை 9 மணிக்கு கல்லூரி முதல்வரை சந்திக்க வேண்டும். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், டி.சி., ஜாதி மற்றும் நன்னடத்தைச் சான்றிதழ், சேர்க்கைக்கான கட்டணம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். 

                    இரண்டாம் கட்ட கலந் தாய்வு 21ம் தேதி பி.எஸ். சி., பாட பிரிவிற்கும், 22ம் தேதி பி.காம்.,- பி.ஏ., பாட பரிவிற்கு நடக்கிறது. இதற்கு பொது பிரிவு பகுதி மூன்றில் 800க்கு 500க்கு மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவர்களும் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவிற்கு மொழி பாடத்தில் 200க்கு 120 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP