ஆசிரியர்களைக் கண்டித்து வகுப்பறைகளை புறக்கணித்த பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள்
கடலூர்:
ஆசிரியர்களைக் கண்டித்து கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களில் ஒரு பகுதியினர், செவ்வாய்க்கிழமை வகுப்புகளை விட்டு வெளியேறினர்.
இதே கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்தவர் ராஜ்குமார். வெங்கடாம்பேட்டை வடக்குத் தெரு காலனியைச் சேர்ந்தவர். அவர் கடந்த 9-ம் தேதி தனது ஊரில் இருந்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். இதற்கு ஆசிரியர்கள் இரங்கல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்குக் கண்டனம் தெரிவித்தும், தகுதி வாய்ந்த கௌரவ விரிவுரையாளர்களை 2-ம் சுழற்சி வகுப்புகளுக்கு நியமிக்க வேண்டும். மாணவர்களிடையே ஜாதி உணர்வை தூண்டுவோர், மற்றும் மாணவர்களிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளும் ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
இதற்காக ஒரு பகுதி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்பறைகளை விட்டு வெளியேறினர். அவர்களைக் கல்லூரி முதல்வர் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மற்ற வகுப்புகள் வழக்கம்போல் செயல்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக