கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆதிதிராவிட விடுதியில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதைக் கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் 180 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலை விடுதியில் வழங்கப்பட்ட உணவு சுகாதாரமாக இல்லை என மாணவர்கள் உணவை சாப்பிடாமல் புறக்கணித்தனர். மேலும் விடுதியில் கழிவறை, குளியலறை, சமையலறை ஆகியவைகளை முறையாக பராமரிக்காததை கண்டித்து ஆனந்தராஜ், செந்தில் ஆகியோர் தலைமை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கடலூர் ஆதிதிராவிடர் நலத் துறை தாசில்தார் சரவணன், மாணவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி இனி சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டு மாணவர்கள் கல்லூரி சென்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக