பெரியார்கலைக் கல்லூரியில் கோ.ஐயப்பன் அறக்கட்டளை பரிசளிப்பு விழா 31.01.2014 அன்று நடைபெற்றது.
கடலூர், பெரியார் கலைக் கல்லூரி தமிழியல் உயராய்வு மையத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருகோ.ஐயப்பன் அவர்களால் இளங்கலைத் தமிழ் இலக்கியத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் பகுதி 1 பொதுத் தமிழில் (முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு) முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் ஆண்டு தோறும் பரிசுகள் வழங்குவதற்காக கோ. ஐயப்பன் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. அவ்வறக் கட்டளையின் பரிசளிப்பு விழா கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழியல் உயராய்வு மையத்தின் சார்பாக 31.12.2014 அன்று காலை 10.00 மணியளவில் சட்டமன்றஉறுப்பினர்கட்டடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்குவந்திருந்தஅனைவரையும் தமிழியல் உயராய்வு மையத்தின் தலைவர் முனைவர்சு.தமிழாழிக் கொற்கைவேந்தன் வரவேற்றார். இயற்பியல்துறைத் தலைவர் (முதல்வர்பொறுப்பு) க.மனோகரன் தலைமையுரையாற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருகோ.ஐயப்பன் அவர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்.மேலும் இவ்விழாவில் திருகோ. ஐயப்பன் அவர்கள் தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சிக்காக தமிழியல் உயராய்வு மைய நூலகத்திற்கு நூல்கள் வாங்குவதற்காக ரூபாய் 50,000/- (ஐம்பதாயிரம்) வழங்குவதாக அறிவித்தார்.
jpdkyh; 03.01.2014 |
jpdkzp 03.01.2014 |
jpdkzp 03.01.2014 |
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக