கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 10-வது சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு பேரிடர் விழிப்புணர்வு நாள் கருத்தரங்கம் 26.12.2014 அன்று நடைபெற்றது
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 10-வது சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு பேரிடர் விழிப்புணர்வு நாள் கருத்தரங்கம் 26.12.2014 அன்று நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ந.கண்ணன் தலைமை வகித்தார். இயற்பியல் துறைத் தலைவர் க.மனோகரன், தாவரவியல் துறைத் தலைவர் ச.கீதாதேவி, ஆங்கிலத் துறைத் தலைவர் ரா.ரவி, கணினி அறிவியல் துறைத் தலைவர் கா.கீதா ஆகியோர் பேசினர்.
முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும் சுனாமி தொடர்பான பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன.
பேச்சுப் போட்டியில் ச. உமாமகேஸ்வரி, ப.பாண்டித்துரை, கட்டுரைப் போட்டியில் த. சந்தியா, பு.கெளதமன், ஓவியப் போட்டியில் ச. சம்பத்குமார், சே. அறிவுடைநம்பி ஆகியோர் முதல் 2 இடங்களைப் பிடித்தனர். இவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசு வழங்கினார்.
கருத்தரங்கில் தமிழ்த் துறைத் தலைவர் சு.தமிழாழிக்கொற்கைவேந்தன் வரவேற்பு உரையாற்றினார். கணிதத் துறைத் தலைவர் சி.சிவசண்முகராஜா நன்றி கூறினார்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக