தாய்ப்பால் வார விழா-“தாய்ப்பால் ஊட்டல் வாழ்க்கையை வெல்வதற்கான வழி”
கடலூர், பெரியார் கலைக் கல்லூயில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள் சார்பில் தாய்ப்பாலின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 07.08.2014 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
பெண் குழந்தைகளுக்கு நம் நாட்டில் பாலூட்டுவதில் கூட பாரபட்சம் காட்டுகிறார்கள். பாலூட்டும் நிலை கிராமங்களில் அதிகமாகவும் நகர்ப்புறங்களில் இந்நிலை வெகுவாக குறைந்து வருகின்றது. நம் நாட்டில் குறிப்பாக பெரு நகரங்களில் தாய்ப்பால் வங்கிகள் செயல்படத்துவங்கியுள்ளது. இந்த வங்கிகளின் மூலமாக தாய்ப்பால் குறைவாக சுரக்கும் பெண்கள் தொற்று நோய்களினால் அவதியுறும் தாய்மார்கள் பிறந்தவுடன் தாயினை இழந்த குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். இதுபோன்ற தாய்பால் வங்கிகள் மிகவும் பின்தங்கிய வறுமையில் வாழும் தாய்மார்கள் அதிகம் வசிக்கும் இக்கடலூர் மாவட்டத்தில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விழாவிற்கு தலைமையேற்ற கல்லூரி முதல்வர் முனைவர்.வ.நா.விஸ்வநாதன் அவர்கள் சொற்பொழிவாற்றினார்.
அதனைத் தொடர்ந்து விழாவிற்கு சிறப்புரையாற்றிய இளைஞர் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் பேராசியருமான முனைவர்.கு.நிர்மல்குமார் தாய்ப்பால் குழந்தையின் பசியை மட்டும் போக்கவல்லது அல்ல. அதிலுள்ள உயிர் ஊட்டச்சத்துக்கள் லேக்டோஸ்ää மாவுச்சத்து கொழுப்பு வகைகள் போன்றவை குழந்தையின் வளர்;ச்சிக்கு அவசியம் தேவை. முறைப்படி தாய்மார்கள் தாய்ப்பாலை குழந்தைக்கு புகட்டினால் குழந்தைக்கு ஏற்படும் குறைபாடுகளில் 40மூ அறவே தவிர்க்கலாம். தாய்ப்பாலிலுள்ள அமினோ அமிலங்கள் மூளை வளர்;ச்சிக்கு இன்றியமையாததாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு வயிற்றுப்போக்கு காதில் சீழ்வடிதல் தோல் தொற்று போன்றவை தடுக்கப்படும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தரும் சீம்பாலால் ஆண்டுக்கு 10 இலட்சம் குழந்தைகள் இறப்பதை தடுப்பதோடு இறப்பு விகிதத்தையும் குறைக்கிறது.
தாய்ப்பால் குழந்தைக்கு மட்டும் நன்மை பயப்பதோடு நிறுத்திவிடாமல் தாய்பால் கொடுக்கும் தாய்க்கும் நன்மை பயக்கிறது. மேலும் மார்பக புற்று நோய் சினைப்பை புற்றுநோய் சத்துக்குறைவு போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை பல அறிவியல் ஆராய்ச்சிகள் நிருபிக்கின்றன. இதனால்தான் இவ்வாண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் மையக்கருத்து “தாய்ப்பால் ஊட்டல் வாழ்க்கையை வெல்வதற்கான வழி” என்பதாகும் என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் தாவரவியல் துறைத்தலைவி முனைவர்.கீதாதேவி வரவேற்றார். விழாவின் இறுதியில் கல்லூரியின் நாட்டு நலப்பபணித்திட்ட அலுவலர் பேராசிரியை மா.ஞானாம்பிகை நன்றி கூறினார். இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் ஆவலுடன் பங்கேற்று பயன்பெற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக