கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் அமைந்துள்ள கடலூர் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி கிர்லோஷ்குமார் ஆய்வு
கடலூர்:
கடலூர் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி கிர்லோஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு எண்ணிக்கை மையம் பாராளுமன்ற தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதே போல் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிர்லோஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 24-ந் தேதி நடைபெற்றாலும், ஓட்டு எண்ணிக்கை மே 16-ந் தேதி நடக்கிறது.

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையமாக கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, கடலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகளும் எண்ணப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிர்லோஷ்குமார் 11.03.2014 (செவ்வாய்க்கிழமை) அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தேர்தல் பார்வையாளருக்கு தனி அறை, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தனி அறை, பத்திரிகையாளர்களுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும். பார்வையாளர்கள் உள்ளே வர முடியாத அளவுக்கு தடுப்பு கட்டைகளை அமைக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள்
வாக்குப்பெட்டிகளை எந்த அறையில் வைக்க வேண்டும். எங்கு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது கடலூர் நகராட்சி ஆணையாளர் காளிமுத்து, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக