கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கணிதத் துறை சார்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் 18.03.2014 அன்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.
கல்லூரி முதல்வர் முனைவர் வ.நா.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கௌசியங் தேசிய பல்கலைக்கழகம், தைவான் பேராசிரியர்கள் ஐந்து நபர்கள் ஹாங், லின், வாங், சென் மற்றும் லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கௌசியங் தேசிய பல்கலைக்கழகத்தின் துணைச் செயலாளர் பேரா.ஹாங் அப்பல்கலையின் ஐந்து பாட பிரிவுகளைப் பற்றி விளக்கினார். பேரா. வாங் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடத்தையும், தைவானில் அமைந்துள்ள உலகிலேயே இரண்டாவது உயரமான கட்டிடத்தினைப் பற்றியும், புத்தமத கோயில்கள் மற்றும் நீளமான துறைமுகத்தை பற்றியும் விவரித்தார். பேரா.லின் கணினி அறிவியல் துறையில் “Recent Trends in Data Analysis” பற்றியும், பேரா.சென் கணிதத் துறை “Fuzzy Analysis” பற்றியும் விளக்கினார்.
இவ்விழாவிற்கு கணிதத் துறை பேராசிரியர் முனைவர் சு.ராமதிலகம் அவர்கள் ஏற்பாடு செய்து வரவேற்புரை, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மற்றும் நன்றி கூறினார். இவ்விழாவில் கணிதத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
Read more...