கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக உலக சிட்டுக்குருவி தின விழா நடைபெற்றது
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக உலக சிட்டுக்குருவி தின விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைகழக, முன்னாள் புல முதல்வர் முனைவர் எல்.எஸ். ரெங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிட்டுக்குருவியை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வுகளை விளக்கிப் பேசினார்.
முன்னதாக விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் விலங்கியல் துறை பேராசிரியர்கள் முனைவர் வினோதா, முனைவர் அருள்தாஸ், முனைவர் ராஜ்குமார், முனைவர் அருள்ஜோதி, முனைவர் பெரியநாயகி, செல்வி ஞானாம்பிகை மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் முனைவர் சின்னதுரை நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக