கடலூர் பெரியார் கலைக் கல்லூரிக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம்
கடலூர் பெரியார் கலைக் கல்லூரிக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்கப்பட்டது.
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 14.02.2014 (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விழாவில் குடிநீர் இயந்திரத்தை இயக்கி வைத்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது:
அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து முதல்வர் செயல்படுத்தி வருகிறார். தனியார் கல்லூரிகளுக்கு இணையாக அரசுக் கல்லூரிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் நிதியுடன் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க இரண்டு பிளான்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. இதன் மூலம் 4,095 மாணவ, மாணவியர் மற்றும் 180 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் பயனடைய உள்ளனர் என்றார்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக