கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி (இயற்பியல்) மூன்றாம் ஆண்டு மாணவர் அரவிந்தவேல் அரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்றார். மேலும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் குத்துசண்டைக்கு இந்திய வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதே போல் முதுகலை (விலங்கியல்) இரண்டாம் ஆண்டு மாணவி பாக்கியலட்சுமி தன் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில்
ரூ. 20 ஆயிரம் ஊக்கத் தொகை பெற்றுள்ளார்.
இந்த சாதனை மாணவர்களுக்கு, கல்லூரியில் நடந்த விழாவில் அமைச்சர் சம்பத் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக