கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 20 நாடுகளின் பண விபரங்கள் அடங்கிய பணக்கண்காட்சி நடைபெற்றது
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 11.02.2014 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11.00மணியளவில் பணக்கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை கல்லூரி முதல்வர் முனைவர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். ஆங்கிலத்துறை பேராசிரியரும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலருமான திரு.சா.டேவிட் சவுந்தர் வரவேற்புரை அளித்தார்.
கல்லூரியின் முன்னாள் மாணவரும், பாரத வங்கியின் திருப்பாப்புலியூர் கிளையில் பணி புரியும் திரு.வெங்கடேசன் அவர்கள் சவூதி அரேபியா, பிரேசில், வெனிசுலா, மலேசியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 நாடுகளின் பண விபரங்களை இக்கண்காட்சியில் காண்பதற்கு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இக்கண்காட்சி நடைபெறுவதற்கு ஆங்கிலத்துறை மாணவர்கள் உறுதுணையாக இருந்தனர். இக்கண்காட்சியை கல்லூரி மாணவ, மாவியர் பார்வையிட்டு பயன்பெற்றனர். மாணவ, மாணவியரின் பொது அறிவுத் திறனை வளர்ப்பதற்கு இக்கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக