கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர்களின் வருகைப்பதிவினை குறுஞ்செய்தி (SMS) மூலம் பெற்றோருக்கு தெரிவிக்க ஏற்பாடு
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் தினம் 07.02.2014 (வெள்ளிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டது.
விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு பேசியது:
மாணவர்களின் வருகைப்பதிவு மற்றும் இதர விபரங்கள் குறுஞ்செய்தி (SMS) மூலம் பெற்றோருக்கு தெரிவிப்பது எனவும் தற்போது மாணவர்களுக்கு தனிப்பயிற்சி (SYSTEM) முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது எனவும் கூறினார்.
இவ்விழாவில் கலந்துகொண்ட பெருந்திரளான பெற்றோர்களை கணிதத்துறை தலைவர் பேராசிரியர் சி.சிவசண்முகராஜா அவர்கள் வரவேற்றார். ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் இரா.ரவி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக