கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பான வாசகம் எழுதும் போட்டி
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு, போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பான வாசகம் எழுதும் போட்டி செவ்வாய்க்கிழமை (08/10/2013) அன்று நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சந்துரு முன்னிலை வகித்தார். கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர் டேவிட் சௌந்தர் ஒருங்கிணைத்தார்.
மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான வாசகங்களை எழுதினர். புனித வளனார் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் மரிய சேவியர், ஜேசிஐ அமைப்பு சண்முகம் நடுவராகச் செயல்பட்டார். மாணவர்கள் கருணாகரன், கோபிதாஸ் ஆகியோர் முதல் இரண்டு பரிசுகளைப் பெற்றனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக