MANAFEST-13 தேசிய அளவிலான போட்டியில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் இராண்டாமிடம் பெற்று சாதனை
புதுச்சேரி சமுதாயக் கல்லூரி மேலாண்மைத் துறையால் 10/10/2013 அன்று MANAFEST-13 தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் 12 மாணவர்கள் பங்கேற்றனர். இளம் வணிகவியல் மூன்றாமாண்டை சேர்ந்த கெளதம் மற்றும் முபாரக் அலி ஆகியோர் BUSINESS QUIZ-ல் இராண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பெரியார் கலைக் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக