கடலூர்
இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து ஸ்டிரைக்செய்தனர். இலவச பஸ் பாஸ், குடிநீர் உள்ளிட்டவசதிகள் செய்துதரக் கோரி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் நேற்று பிற்பகல்வகுப்பை புறக்கணித்து ஸ்டிரைக் செய்தனர். கல்லூரி முன்பு திரண்ட மாணவ,மாணவியர்கள் கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்து சப் கலெக்டர் லலிதாவிடம்மனு கொடுத்தனர்.
இது குறித்து கல்லூரியில் 3ம் ஆண்டுதமிழ்த்துறை மாணவர் பாலகிருஷ்ணன்கூறுகையில்,
கல்லூரி திறந்து இரண்டு மாதங்களாகியும் இதுவரை எங்களுக்கு பஸ் பாஸ் வழங்கவில்லை. இது பற்றி கேட்டால் போக்குவரத்துக்கழக நிர்வாகம், உங்கள் அடையாள அட்டை காண்பித்து பஸ்சில் டிக்கெட் வாங்காமல் செல்லுமாறு கூறுகின்றனர். ஆனால் பஸ் சில் கண்டக்டர் ஏற்றுக்கொள்வதில்லை. டிக்கெட் வாங்கும்படி வற்புறுத்துகின்றனர் என்றார்.
அரசு போக்குவரத்துக்கழக கமர்ஷியல் மேலாளர் முருகானந்தம் கூறுகையில்,
கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக 400 பேரின் புகைப்படம் ஒட்டிய மனுக்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையே மாணவர்கள் அரசு பஸ்களில் அடையாள அட்டையை காண்பித்து பயணம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. இது பற்றி கண்டக்டர்களிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டக்டர்கள் அனுமதிக்கவில்லை என புகார் தெரிவித்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Read more...