கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேதியியல் மன்றத் தொடக்க விழா
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேதியியல் மன்றத் தொடக்க விழா திங்கள்கிழமை நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வரும் (பொறுப்பு) வரலாற்றுத்துறைத் தலைவருமான முனைவர் க.காந்திமதி தலைமை தாங்கினார். வேதியியல் துறைத் தலைவர் முனைவர் பா.ஷர்மிளா இந்திராணி முன்னிலை வகித்தார். கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி வேதியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அனுசுயா சிறப்பு சொற்பொழிவாற்றினார். வேதியியல் துறை இணைப் பேராசிரியர் சு.கலைமணி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக