கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.வினர் முற்றுகை
கடலூர் :
கடலூரில் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் நேற்று இரவு மினி லாரி, கார் சென்றதை கண்டித்து அ.தி.மு.க., வினர் மையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி ஆகிய நான்கு தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளில் ஏஜன்டுகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் இம்மையத்திற்குள் மினி வேன் மற்றும் இன்டிகா கார் சென்றன.
உடன் அங்கு பணியில் இருந்த அ.தி.மு.க., ஏஜன்ட் ரவிச்சந்திரன் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையத்தால் அனுமதி வழங்கப்படாத வாகனங்களை எப்படி உள்ளே அனுமதிக்கலாம் என தெரிவித்தார். தகவல் அறிந்த அ.தி.மு.க., வேட்பாளர்கள் சம்பத், சிவசுப்ரமணியன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சிவக்கொழுந்து, நிர்வாகிகள் என அனைவரும் ஓட்டு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி., கமலாபாய், அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார். அதில் கல்லூரியில் பேராசிரியர்கள் சார்பில் ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்த அனுதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஓட்டு எண்ணும் மையத்தில் விழா நடந்த எப்படி அனுமதி வழங்கலாம் எனக் கேட்டு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற இருந்த விழா நடக்காது என உறுதியளித்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க., வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கலைந்துச் சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக