கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு
கடலூர்:
கடலூரில் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி மினி லாரி, கார் சென்றதை கண்டித்து அ.தி.மு.க.,வினர் முற்றுகை போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மினி லாரி மற்றும் கார் ஒன்று கல்லூரி வளாகத்திற்குள் சென்றது. இதனையறிந்த அ.தி.மு.க.,வினர் ஓட்டு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீஸ் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் செய்தனர்.அதனைத் தொடர்ந்து கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் ஆகியோர் நேற்று காலை மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள பெரியார் அரசு கல்லூரி மையத்தை பார்வையிட்டனர். தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாத வாகனங்களை கல்லூரியினுள் அனுமதிக்கக் கூடாது என்றும், கல்லூரியைச் சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் தடுப்பு அமைக்க உத்தரவிட்டனர்.

அதன்படி தேவனாம்பட்டினம் சாலையில் உப்பனாற்று பாலம் மற்றும் சில்வர் பீச் புறக்காவல் நிலையம் அருகே உள்ள சாலைகளில் போலீசார் "பேரிகாட்' அமைத்து வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக