பெரியார் அரசு கலைக்கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் 01.03.2016- செவ்வாய்க்கிழமை அன்று இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் நுண்ணுயிரியல் துறை மற்றும் மாவட்ட தொழுநோய் ஒழிப்பு திட்ட மருத்துவ குழுவினரின் சார்பாக நடைபெற்றது.
பெரியார் அரசு கலைக்கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் 01.03.2016-
செவ்வாய்க்கிழமை அன்று
இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் நுண்ணுயிரியல் துறை மற்றும் மாவட்ட தொழுநோய் ஒழிப்பு
திட்ட மருத்துவ குழுவினரின் சார்பாக நடைபெற்றது.
இக்கருத்தரங்கினை கல்லூரி முதல்வர்
வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரையாற்றினார். தாவரவியல் துறைத்தலைவர்
பேரா.ச.கீதாதேவி அவர்கள் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர்கள் முனைவர்.க.மனோகரன்
பேரா.சு.தமிழாழிக் கொற்கை வேந்தன் பேரா.கு.நிர்மல்குமார் மற்றும் மருத்துவர்.நாகராஜன்
சிறப்புரையாற்றினார்கள். மருத்துவ குழுவின் சார்பாக திரு.N.இராமலிங்கம் அவர்கள் தொழுநோயால்
பாதிக்கப்பட்டோரின் நிலையையும் தடுப்புகளையும் விளக்கினார்.
நுண்ணுயிரியல் துறைத்தலைவர் கு.நிர்மல்குமார்
பேசுகையில் தொழுநோய் காரணியான மைக்கோபாக்டீரியம் லெப்ரேவிற்கு இதுவைர வளர் ஊடகம்
கண்டுபிடிக்கபடவில்லை அதனால் தான் இதுவரை தொழுநோய் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை
எனவும் இதனை வளர்ப்பதற்கு வளர் ஊடகம் கண்டுபிடிப்பவர்களுக்கு நோபல் பரிசு
காத்திருக்கின்றது. எனவே, இந்நோய்
ஒழிப்பதற்கான மருந்துகளை கண்டுபிடிக்க கூடிய ஆராய்ச்சியாளர்களாக உருவாகுங்கள் என கூறினார்.
கருத்தரங்கில் சீசா தொண்டு நிறுவனத்தின்
சார்பாக தொழுநோய் விழிப்புணர்வு குறுநாடகம் நடத்தப்பட்டது. கருத்தரங்கினை இளைஞர்
செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக முனைவர்.ம.ஆனந்தராஜ் மற்றும்
முனைவர்.கு.நிர்மல்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்தரங்கில் பல்வேறு துறையை சார்ந்த மாணவ
மாணவிகள் பேராசிரியர்கள் பங்கு பெற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக