கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம் (03.03.2016) வியாழன் அன்று நடைப்பெற்றது
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பாக ஒரு நாள்
கருத்தரங்கம் (03.03.2016) வியாழன் அன்று
நடைப்பெற்றது.ஆங்கிலத் துறைத் தலைவர் இரா.ரவி வரவேற்புரை நிகழத்தினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர்.வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.
ஆங்கிலம் கற்பதில் உள்ள சில இலக்கண மற்றும் மொழியியல் சிறப்பினையும் மற்றும் இதனை
எளிய முறையில் கற்பதற்கான வழியினையும்
விளக்கினார். இந்தியர்கள் ஆங்கிலத்தில் எழுதும் இலக்கியம் பல்வேறு மாறுதலுக்கு
உட்பட்டு தற்போது செழிப்பான நிலையில் உள்ளது. நிகழ்சியின் சிறப்பு விருந்தினராக
புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் முனைவர் பு.ராஜா
அவர்கள் சிறுகதை மரபும் இந்தியர்களின்
ஆங்கில இலக்கியத்தில் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தம்முடைய உரையில் அவர் ஆங்கிலத்தில் இந்திய தாய்மொழிகளின் கலப்படம் உள்ளதை
குறிப்பிட்டார்.
இந்தியர்கள் ஆங்கிலத்தில் எழுதும்போது
அவர்களுடைய உணர்வின் உண்மையாக வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டார். பின்னர்
இந்தியர்களின் இதிகாசங்களான இராமாயணம் மகாபாரதம் போன்ற கதைகளில் குறியிட்டின்
மூலம் பல செய்திகளை வெளிப்படுத்தினார். கதை கூறும் கலை இந்தியர்களிடையே இயல்பாகவே
உள்ளது என்று எடுத்துக்காட்டு மூலம் கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில்
பரிசு பெற்ற ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிரைவாக
முதுகலை பட்டபடிப்பு இரண்டாம் ஆண்டு மாணவி சிந்து நன்றியுரை கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக