கடலூர்-சிதம்பரம் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தினத்தந்தி- 29.01.2016 (வெள்ளிக்கிழமை)
தொகுப்பூதியம்
தமிழ்நாட்டில் அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதுவும் 10 மாதங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
ஆனால் பல்கலைக்கழக மானியக்குழுவானது, கவுரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாதங்களுக்கும் மாத ஊதியமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. எனவே அதன்படி தங்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்
அதன்படி கடலூர் அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களும் நேற்றுவேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் வகுப்புகளுக்கு பாடம் நடத்த செல்லாமல் கல்லூரி வளாகத்தில் சிறிதுநேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு, வளாகத்தில் அமர்ந்து இருந்தனர்.
சிதம்பரம்
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 54 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று, தங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்தபடி மாத சம்பளம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கல்லூரி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கவுரவ விரிவுரையாளர்கள் சங்க கிளை தலைவர் ரோஷினி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கடலூர்,

தினகரன் 29.01.2016 - வெள்ளிக்கிழமை
கடலூர் அரசு கல்லூரியில் விரிவுரையாளர்கள் போராட்டம்
கடலூர், : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தேவனாம்பட்டினத்தில்
உள்ள அரசு கலை கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர். கடலூர் அரசு
கலைக்கல்லூரியில், 61 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி
வருகின்றனர். தமிழகம்
முழுவதும் 3,411
பேர் பணியாற்றி வருகின்றனர். அரசு கலை
கல்லூரிகளில் குறைந்தபட்ச சம்பளம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். சிறப்பு
டிஆர்பி மூலம் அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகள்
வலியுறுத்தி ஒருநாள் அடையாள வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். கவுரவ விரிவுரையாளர்கள் கண்ணதாசன், வைரமுத்து, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர். விரிவுரையாளர்கள் போராட்டம் காரணமாக வகுப்புகள்
பாதிக்கப்பட்டது..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக