தேசிய வாக்காளர் தினத்தையொட்டி 25.01.2016 கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் சிறப்பு முகாம் மற்றும் சிறப்புபேருரைக்கான மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றது.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி 25.01.2016 கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் சிறப்பு முகாம் மற்றும் சிறப்புபேருரைக்கான மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் முனைவர்.சு. தமிழாழிக் கொற்கை வேந்தன் தமிழ்த்துறைத்தலைவர்
வரவேற்புரை நல்கினார். முனைவர்.க.மனோகரன் இயற்பியல் துறைத்தலைவர் தனது
தலைமையுரையில் வாக்காளர் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். “அனைத்தும் உள்ளடக்கிய மற்றும் தரம்மிகு அரசியல்
பங்கேற்பு” என்னும் தலைப்பில் கல்லூரி முதல்வர்.வ.நா.விஸ்வநாதன் அவர்களின்
சிறப்புபேருரையில் இந்தியாவில் தரம்மிகு மக்களாட்சி மலர்வதற்கு வாக்கு சதவீதம்
அதிகமாக்கப்படவேண்டும் என்று கூறினார்.
இந்திய மக்களாட்சியில் மக்கள் பிரதிநிதித்துவ
சட்டம் 1951 பல்வேறு
விதிமுறைகளை வகுத்து அமைதியான தேர்தலை நடத்துவதற்கு வழிவகை செய்யவும், இந்தியாவில் 1988-ல் வாக்குரிமையை இளைஞர்கள் பெறும்வகையில் 21-வயதிலிருந்து 18-ஆக குறைக்கப்பட்டது என்றார். இளைய வாக்காளர்கள்
வருகின்ற தேர்தல்களில் அதிகமான அளவில் வாக்களிக்க வேண்டும். தேர்தல் தினத்தன்று
வாக்களிப்பது என்பது நமது அடிப்படை கடமையாம். இதன் அடையாளங்களான மொழி, மதம், சாதி மற்றும் பிராந்தியம் ஆகியவற்றைக் கடந்து ஒருமித்த கருத்தில் வாக்களிக்க
வேண்டும். இந்தியாவில் 1952-ல் தொடங்கிய
தேர்தல் முதல் இன்றுவரை பல அரசியல் மாற்றங்கள் அமைதியாக நடைபெற்றுள்ளன.
மக்களாட்சியில் சாசன ரீதியான மாறுதல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட
வேண்டும். மேலும், வன்முறையற்ற
தேர்தல் ஒரு தரம்மிகு மக்களாட்சியை உருவாக்கும்.
மக்களாட்சி நாடுகளில் பல்வேறு நாடுகள் சாசன
ரீதியாக தோல்வி அடைந்தாலும் இந்தியா தனது 67-ம் அகவையிலும், அமைதியான தேர்தலை சந்திக்கும். மக்களாட்சியை
மீளதளைப்பதற்கு சகிப்புத்தன்மை, அனைத்து
மக்களிடமும் இருத்தல் அவசியம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா பல்வேறு இன
பாகுபாடுகளை கடந்து நிலையான அரசு அமைப்பதில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்
எனக்கூறினார்.
An awareness
program and special lecture was conducted on the occasion of the National
Voters Day at Periyar Government Arts College, Cuddalore,
Dr.S.Tamizhazhi Korkkai Vendan, Head
of Department of Tamil gave the Welcome address. Dr.K.Manoharan, Head of Department
of Physics explained the significance of the Voters Day. Dr.V.N.Viswanathan,
Principal of the college gave a special address on the topic “Inclusiveness
and Quality Participation”. He emphasized the fact that in India the voting
percentage has to be increased for a quality democracy to flourish.
The People’s Representative Act of
1959, formulated by the Indian Democracy laid down rules for the peaceful
conduct of elections and thereby the age for voting was reduced from 21 to 18
in 1988. More number of young voters must cast their votes in the coming
elections. It is our fundamental duty to exercise our vote on the day of
elections.
We should vote unanimously eschewing
language, Religion, Caste and regional barriers, In India several political
changes have taken place peacefully since the first elections held in 1952. In
a democratic country importance must be given only to changes based on the
Constitution. Moreover a quality democracy can be established only through
non-violent elections.
Among the democratic countries of
the world many have failed in their constitution; India proudly enters its 67th
year of independence and is ready to face peaceful elections. All the people
must pursue intolerance in order to reinvigorate democracy. India, which cherishes Unity in diversity,
should overcome several caste-based differences and the youth should
participate co-operatively for a stable government.
Later, Dr.P.Elavarasan,
Department of Political Science made the students and teachers undertake the
voter’s day pledge as advocated by the Election Commission of India. Through
this the students who are fresh voters pledged to fulfill their duties. Towards
the end Dr.B.Sharmila Indirani, Head of the Department of Chemistry propose the
vote of thanks.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக