நம் இந்திய திருநாட்டின் 69-வது சுதந்திரதின விழா, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின சிறப்பு பேருரையாற்றினார்
முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அவா்களின் சுதந்திரதின சிறப்பு பேருரை
‘இந்தியாவில் உற்பத்தி செய்க’ என்ற பாரத பிரதமரின் தாரக மந்திரம் இந்தியாவை உச்சகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் என்ற நல்ல சிந்தனையால் இந்தியா வளம்பெறும் என்பது உறுதி. உலக நாடுகளில் இந்தியா உற்பத்தி திறன் உள்ள நாடுகள் என்ற வரிசையில் தற்போது 142-ம் இடத்தை வகிக்கின்றது.
ஐந்து ஆண்டுகளில் நாம் 50-வது இடத்தை பெறவேண்டுமேயானால் தற்போது உள்ள உற்பத்தியை 5 மடங்காக பெருக்க வேண்டும். உற்பத்தி உத்தி என்பதாக இரண்டை நான் சொல்ல விரும்புகின்றேன்.
1. குறைந்த விலையில் தானியங்கி எந்திரங்களை உருவாக்குதல்.
2. உற்பத்தி செய்த பொருளை சந்தைப்படுத்துதல்.
புதிய தொழில்நுட்பத்தை கொண்டு புதிய முயற்சிகளை தொழில்முனைவோர் ஏற்றுக்ககொள்வர். ஒரு உற்பத்தி நாடு என்பது ஒரு தெளிவான தொழில் கொள்கையை உருவாக்கி அதனை அடைய வேண்டிய உத்தியை உருவாக்க வேண்டும்.
இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் உலகசாதனை புரிந்தது ஒரு விபத்து அல்ல. மாறாக மின்னணுவியல் (Electronics) துறை வகுத்த பொருள் உற்பத்தி போட்டியில் சரியான தொழிற்கொள்கை ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. சாதாரண திறன் தேவைப்படும் பொருள் உற்பத்தியில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் மிகக்கடினமான பொருள் உற்பத்தியை இலகுவாக செய்கின்றது. இன்றைய பொருளாதார போட்டியில் உற்பத்தி பொருளை தயார் செய்வதுää கார் மற்றும் டீசல் இயந்திரங்களை தயாரிப்பதில் இந்தியா முனைப்பாக உள்ளது.
நாம் எந்த தொழிற்துறையில் முன்னிலை வகிக்கின்றோமோ அத்தொழில் சார்ந்த தொழில் உற்பத்தியை பெருக்குவதில் நாம் புதிய உத்திகளை உருவாக்க வேண்டும். உதாரணமாக பாதுகாப்பு துறை மென்பொருள் சேவை மின்னனு பொருள் உற்பத்திகள் கட்டுமான பணிகள் உடல் மற்றும் சுகாதார பாதுகாப்பு மேலும் விவசாயம் சார்ந்த தொழிற்கூடங்கள் மேற்கூறிய தொழில்கள் அனைத்தும் ஒருங்கே தகுந்த உத்திகளோடு செயல்படுத்தப்படுமேயானால் உலக வர்த்தக பகிரங்க போட்டியில் நாம் அனைத்து நாடுகளையும் மிஞ்சி நிற்கலாம்.
கடலூர் மாவட்டத்தை பொருத்தவகையில் சுற்றுச்சூழ்நிலை பாதுகாப்பு மற்றும் விவசாயம் சார்ந்த தொழிற்கூடங்கள் வளர்ப்பதில் நாம் முனைப்புடன் செயல்படவேண்டும். கரும்பு விளைச்சலை பெருக்கி புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சர்க்கரை உற்பத்தியை பெருக்கலாம். கடலூர் கடலோர பகுதியில் மீன்களை பதப்படுத்தும் தொழிற்கூடங்கள் அந்நிய செலாவணியை பெருக்கும் பதப்படுத்தப்பட்ட மீன் ஏற்றுமதி நாம் ஒரு சில உத்தியின் மூலம் பெருக்கவேண்டும். கடலூரில் பணப்பயிரான முந்திரி மற்றும் கரும்புகளுக்கு உலக சந்தையை நாடும் வழிமுறையை தோற்றுவிக்கவேண்டும்.
மென்பொருள் உற்பத்தியில் கடலூர் மாவட்டத்தில் தேவையான அளவு மனித வளங்களை பயன்படுத்தப்படவில்லை. ஆகவே மென்பொருள் தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை வரவேற்கும் வகையில் மென்பொருள் மையம் அமைக்கப்பெறவேண்டும். உயர்க்கல்வியில் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை பல்கலைகழகங்களும் கல்லூரிகளும் முனைப்பாக ஈடுபடவேண்டும். நாம் இனிதே கொண்டாடும் இந்த சுதந்திர தினத்தன்று கடலூர் மாவட்டத்திற்கு ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாநில பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக அரசுக்கு வைப்போம்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக