திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகள் ”மராத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் ” 13.08.2015 காலை 06.00 மணிக்கு கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் சார்பாக நடைபெற்றது.
தினத்தந்தி 14.08.2015
கடலூரில் நேற்று நடந்த மினி மாரத்தான்
ஓட்டத்தில் கல்லூரி மாணவ–மாணவிகள் 800 பேர் பங்கேற்றனர்.
மினி மாரத்தான்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த
கல்லூரி மாணவ– மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி,
சதுரங்க போட்டிகள் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு
கல்லூரியில் நேற்று நடந்தது. அரசு பெரியார் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய
மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டியை திருவள்ளுவர் பல்கலைக்கழக உடற்கல்வி
இயக்குனர் அமல்தாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் 35 கல்லூரிகளை சேர்ந்த 465
மாணவர்கள் கலந்து கொண்டு சில்வர் பீச் ரோடு, புதுப்பாளையம்,
அண்ணாபாலம், ஜவான்பவன் புறவழிச்சாலை, கம்மியம்பேட்டை பாலம், செம்மண்டலம், தலைமை தபால் நிலையம் வழியாக ஓடி வந்து பீச் ரோடு வழியாக மீண்டும் கல்லூரி
வளாகத்தை வந்தடைந்தனர். இதில் 7 மாணவர்கள் தேர்வு செய்தனர்.
அகில இந்திய போட்டிக்கு தகுதி
தொடர்ந்து மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி
நடந்தது. இந்த போட்டியை கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கொடியசைத்து தொடங்கி
வைத்தார். உடற்கல்வி இயக்குனர் நிர்மல்குமார், மண்டல அமைப்பாளர் கவாஸ்கர்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 32 கல்லூரிகளை சேர்ந்த 342
மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் ஓட்டத்தை கல்லூரியில்
இருந்து தொடங்கி பீச்ரோடு, புதுப்பாளையம், அண்ணாபாலம் வளைவு, பாரதிசாலை, பீச்ரோடு
வழியாக சென்று மீண்டும் கல்லூரியை சென்றடைந்தனர்.
இவர்களில் இலக்கை குறைந்த நேரத்தில் எட்டிய 5 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ– மாணவிகள் 12 பேரும் அகில இந்திய அளவில்
பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடக்கும் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள தகுதி
பெற்றனர். இந்த போட்டியில் 5 மாவட்டங்களை சேர்ந்த 67 கல்லூரிகளை சேர்ந்த மொத்தம் 807 மாணவ– மாணவிகள் கலந்து கொண்டதாக உடற்கல்வி இயக்குனர் நிர்மல்குமார்
தெரிவித்தார்.
தொடர்ந்து சதுரங்க போட்டிகள் நடந்தது. இதில் 60–க்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர்.
அவர்களில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களும் அகில
இந்திய அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்
தினமுரசு 13.08.2015 வியாழன் |
தினமலா் 14.08.2015 வெள்ளிக்கிழமை |
சதுரங்கபோட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள்.. |
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக