TNSDE& ICTAC மற்றும் பெரியார் அரசு கலைக் கல்லூரி இணைந்து தகவல் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புகளை எவ்வாறு பெருக்கலாம்” விழிப்புணர்வு முகாம் 28.02.2015 அன்று நடைபெற்றது.
njhopy; KidNthh; tpopg;Gzh;T Kfhk;-2015
தொழில் முனைவோர்
விழிப்புணர்வு திட்டம்-2015 சென்னை மற்றும் TNSDE- மற்றும்
பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர் இணைந்து தகவல் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புகளை
எவ்வாறு பெருக்கலாம் என்ற விழிப்புணர்வு முகாம் வணிகவியல் துறையின் சார்பாக
நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு
கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன், கடலூர் மாவட்டம்
ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாக உருவாக்கப்பட வேண்டும் என்று கூறி தேசிய
தகவல்தொழில்நுட்ப கொள்கை-2000 பற்றிய
செய்திகளை குறிப்பிட்டார். பேரா.முனைவர்.ந.கண்ணன் அவர்கள் தொழில் முனைவோர்
மேற்கொள்ள வேண்டிய எதிர்நோக்க வேண்டிய சவால்களை கோடிட்டு காட்;டினார். திருச்சி புனித வளனார்
கல்லூரி முனைவர்.டு.து.சார்லஸ் தொழில் முனைவோர்
விழிப்புணர்வு முகாமில் சிறப்புரையாற்றினார். இவ்விழிப்புணர்வு
முகாம் ICTACT- என்ற அமைப்பின் மூலமாக நிதிபெற்று நடைபெற்றது. இவ்வமைப்பின்
பிரதிநிதியாகவும்
ஒருங்கிணைப்பாளராகவும்
செயல்பட்டவர் திரு.ஜெயரஸ் அவர்கள். நிகழ்ச்சிகளை வணிகவியல் துறை பேரா.S.சுசை ஜான் ரொசாரியோ ஒருங்கிணைப்பாளர் பெரியார் அரசு
கல்லூரி தொழில்முனைவோர் வளர்ச்சிக்குழு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் கணினி அறிவியல் துறை பேராசிரியர்.ஆ.லீனஸ் நன்றி கூறினார்.
தினமலா் 03.03.2015 செவ்வாய்க்கிழமை |
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக