தமிழ்த்துறையின் சாா்பில் ”தமிழ் இலக்கிய விழா மற்றும் ‘இன்றைய கல்விச் சூழலில் மாணவர்கள் முன்னேறப் பெரிதும் துணை புரிபவர்கள் ஆசிரியர்களே! பெற்றோர்களே!’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் 26.02.2015 அன்று நடைபெற்றது.
‘இன்றைய கல்விச் சூழலில் மாணவர்கள் முன்னேறப் பெரிதும் துணை புரிபவர்கள் ஆசிரியர்களே! பெற்றோர்களே!’ என்ற தலைப்பில் பட்டிமன்றம்
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் 26.02.2015 அன்று காலை 10.30. மணிக்கு அண்ணா நூற்றாண்டு விழாக் கட்டடத்தில் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்சு.தமிழாழிக் கொற்கைவேந்தன் இலக்கிய விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் வ.நா.விஸ்வநாதன் விழாவிற்குத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.
விழாவின் சிறப்புநிகழ்ச்சியாக ‘இன்றைய கல்விச் சூழலில் மாணவர்கள் முன்னேறப் பெரிதும் துணைபுரிபவர்கள் ஆசிரியர்களே! பெற்றோர்களே!’ என்றதலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்ற நடுவராகப் பேராசிரியர்அ.அர்த்தநாரி பணியாற்றினார். ‘ஆசிரியர்களே’ என்ற அணியின் தலைவராக உதவித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ந.பாஸ்கரனும் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களான ப.தாமோதரன் (இரண்டாமாண்டு முதுகலைத் தமிழ்) சு.ராஜா (முதலாமாண்டு முதுகலைத் தமிழ்) சி.மோகனா (இரண்டாமாண்டு இளங்கலைத் தமிழ்) க.ரம்யா (இரண்டாமாண்டு இளங்கலைத் தமிழ்) ஆகியோர்கலந்து கொண்டுபேசினர்.
‘பெற்றோர்களே என்ற அணியின் தலைவராக உதவித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர். வீ.பன்னீர்செல்வமும் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களான சி.பத்மநாபன் (இரண்டாமாண்டு முதுகலைத் தமிழ்) மு.ராஜ்குமார் (முதலாமாண்டு முதுகலைத் தமிழ்) செ.லோகேஸ்வரி (மூன்றாமாண்டு இளங்கலைத் தமிழ்) த.சந்தியா (இரண்டாமாண்டு இளங்கலைத் தமிழ்) ஆகியோர் கலந்துகொண்டு பேசினர் .

இலக்கிய விழாவின் இறுதியில் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர்ப.குமரன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் இளங்கலைத் தமிழ் மற்றும் முதுகலைத் தமிழ் மாணவர்களும் இளமுனைவர் பட்ட ஆய்வு மாணவர்களும் முனைவர் பட்ட ஆய்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக