பல்கலைக் கழக மானிய நிதிநல்கை குழுவின் உதவியுடன்அரசியல் அறிவியல் துறையின் சார்பாக “இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு: அரசின் நிர்வாகத்தில் உள்ள சவால்களும்” எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் பல்கலைக் கழக மானிய நிதிநல்கை குழுவின் உதவியுடன்அரசியல் அறிவியல் துறையின் சார்பாக “இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு: அரசின் நிர்வாகத்தில் உள்ள சவால்களும்” எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் ஆகஸ்ட் 2014 - 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
துவக்கவிழாவில் பேரா.வி.இராயப்பன்அரசியல் அறிவியல் துறைத்தலைவர் அனைவரையும் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர்.வ.நா.விஸ்வநாதன் பேசுகையில் “உணவுப் பாதுகாப்புக் கொள்கை” எனும் தலைப்பில் உலக உணவு மற்றும் விவசாயம் அமைப்பின் (FAO) அறிக்கையின்படி ஏழை விவசாயிகளுக்கான மானியம் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் காப்பீடு திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா தவறிவிட்டது என்றும் மேலும் முந்தைய காங்கிரஸ் மற்றும் தற்போதைய பா.ஜ.க. அரசின் நிலைகளை எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினர் முனைவர்.ப.சக்திவேல் (அண்ணாமலைப் பல்கலைக் கழகம்) பேசுகையில் உணவுப் பாதுகாப்புத் சட்டம்-2013 ன் சிறப்புகளையும் பொதுவினியோகத் திட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டியதின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
இக்கருத்தரங்கத்தின் ஆய்வுக் கட்டுரைகளை புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தின் முதல் பிரதியை கல்லூரி முதல்வர் வெளியிட சிறப்பு விருந்தினர் திரு.ப.சக்திவேல் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இக்கருத்தரங்கிற்கு பெங்களுர் கேரளா பீஹார் மற்றும் சென்னை ஆகிய இடங்களிலிருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். கருத்தருங்கின் இறுதியில் திரு.ப.இளவரசன் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் நன்றியுரை கூறினார்.
கருத்தரங்கம் குறித்து தினமலா் நாளிதழ்(புதுச்சோி ) செய்தியும் புகைப்படமும் 28.08.2014 |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக