கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2014-2015 ம் கல்வியாண்டிற்க்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப விநியோகம் 19.05.2014 (திங்கள்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் பெரியார் கல்லூரியில் 2014-2015ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இளங்கலை பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் கல்லூரியில் 19.05.2014 (திங்கள்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 06.06.2014 அன்று மாலை 5 மணிக்குள் கல்லூரி அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும்.
முதுகலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்ட வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் நடைபெறும்.
கடலூர் மாவட்ட செய்திகள்
Read more...