கடலூர் பெரியார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மகளிர் தினம் கொண்டாட்டம்
கடலூர் பெரியார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 08.03.2014 அன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விலங்கியல் துறை பேராசிரியை செல்வி மா.ஞானாம்பிகை வரவேற்பு நல்கினார். கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
விழாவில் முதல்வர் வ.நா.விஸ்வநாதன் பேசியது:
பெண்களுக்கெதிரான கொடுமைகள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டியும், பெண்சிசுக் கொலைகல் தடுக்க வேண்டியும், பெண்களுக்கு பாராளுமன்றத்தில் 30% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் அதற்குரிய முயற்சியை கடலூரில் இருந்து துவங்க வேண்டும். மேலும் பெண்களை ஆணுக்கு சமமாக மதித்து ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 51-A உட்பிரிவில் பெண்களுக்கெதிராக நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கான விதிமுறைகள் உள்ளன. அவற்றை நடைமுறைபடுத்தினால் மட்டுமே பெண்கள் சமூதாயத்தில் பெரிதும் முன்னேற வழி வகுக்கும் என்றார்.
விழாவில் தாவரவியல் துறை பேராசிரியை மா.பாக்கியலட்சுமி ஆற்றிய சிறப்புரை:
ஐக்கிய நாட்டு சபை 2014-ஆம் ஆண்டின் மகளிர் தினத்தை “Equality for Women is progress for All” என்று அறிவிப்பு செய்து சிறப்பித்துள்ளது என்றார்.
இறுதியில் நாட்டு நலப்பணித்திட்டம் மாணவி சு.அருள்ஜோதி நன்றி உரை கூறினார்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக