கடலூர் பெரியார் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாட்டம் - புகைப்படங்கள்
கடலூர் பெரியார் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா 27.02.2014 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் மனோகரன் வரவேற்றார். விலங்கியல் துறை பேராசிரியர் ஜெயந்திதேவி நன்றி கூறினார்.கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய வேதியியல் குழும அணு எரிபொருள் ஆய்வுப் பகுதி தலைவரும், விஞ்ஞானியுமான ஆனந்தசிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய வேதியியல் குழும அணு எரிபொருள் ஆய்வுப் பகுதி தலைவரும், விஞ்ஞானியுமான ஆனந்தசிவன் பேசியது:
தொன்மையான, பாரம்பரிய அறிவியல் அழிந்து வருகிறது. அறிவியல் என்பது உள்ளார்ந்த தேடல். இந்தியர்கள் முதலில் கண்டுபிடித்த பூஜ்ஜியம், 2-வது கண்டுபிடித்த எண்கள் தான் சிறந்த கண்டுபிடிப்புகளாக உள்ளன. துரு பிடிக்காத இரும்பைக் கண்டுபிடித்ததும் இந்தியர்கள் தான். ஆனால் நாம் 21-ஆம் நூற்றாண்டிலும் பாதி உடை அணிந்த ஆதி மனிதர்களாகத் தான் இருக்கிறோம். நம்மிடையே உள்ள குறைகளை களைந்தால் இந்தியா வளரும். நமது நாட்டில் உள்ள கோவில், கலை, பண்பாடு ஆகியவை அழியாத புகழாக இருக்கிறது. சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே கழிவறை பயன்படுத்தும் அறிவை மக்கள் பெற்று இருந்தார்கள். அதேபோல் இப்போது நாம் வாக்களிக்கும், குடவோலை முறையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கண்டுபிடித்து இருந்தார்கள். 15 அடிப்படை அறிவியல் உண்மைகளை உலகத்துக்கு இந்தியர்கள் தான் கொடுத்தார்கள். மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும். அருகில் இருந்து ஆசிரியர்கள் சொல்வதை கேட்க வேண்டும். நாம் நம்மை பற்றிய செய்தியை வெளிநாட்டினர் சொன்னால் தான் நம்புவோம். அந்த எண்ணத்தை கைவிட வேண்டும். அறிவியலுக்கு வசதி தேவையில்லை. சிந்தனை இருந்தால் போதும். ஆழமாக சிந்தித்துச் செயல்பட வேண்டும். ஆராய்ச்சியை மாணவர்கள் இப்போதில் இருந்தே தொடங்க வேண்டும். தமிழில் நன்றாக பேசினால் ஆங்கிலம் எளிதில் வந்துவிடும் என்றார்.
விலங்கியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வு குறித்த புகைப்படங்கள்.
வேதியியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வு குறித்த புகைப்படங்கள்.
கணிப்பொறி அறிவியல் துறை (CLP) நடைபெற்ற நிகழ்வு குறித்த புகைப்படங்கள்.
கல்லூரி முகப்பு புகைப்படங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக