கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள கல்வி உதவி தொகையை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
கடலூர்:
விண்ணப்பம் அளித்து 2 ஆண்டுகளாகியும் வழங்கப்படாமல் உள்ள கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பாடப் பிரிவு 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமாரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
2012-2013 கல்வி ஆண்டில் இளங்கலை பொருளாதாரம் பாடப் பிரிவில் சேர்ந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கல்வி உதவித்தொகை கேட்டு உரிய முறையில் விண்ணப்பம் அளித்திருந்தோம்.
மற்றத் துறை மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குரிய உதவித்தொகையும் வழங்கப்பட்ட நிலையில், பொருளாதாரத் துறை மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக