திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுத்துறை பேராசிரியர்கள் சிறப்பு கூட்டம்: கடலூர் பெரியார் கலைக்கல்லூரி துறை பேராசிரியர் வண்ணமுத்து பங்கேற்பு
விருத்தாசலம் :
திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுத்துறை பேராசிரியர்கள் சிறப்பு கூட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்
கல்லூரியில் நடந்தது.
கல்லூரி முதல்வர் சபாநாயகம் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் கலாவதி, ஜெயந்தி, கதிர்வேல் முன்னிலை வகித்தனர். விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் வரவேற்றார். விளையாட்டுத் துறை பேராசிரியர்கள் வண்ணமுத்து, ராஜமாணிக்கம், வாசுகி, இந்துமதி வாழ்த்திப் பேசினர். கடலூர் பெரியார் கலைக்கல்லூரி, செயின்ட் ஜோசப் கலைக் கல்லூரி, விழுப்புரம் சிகா கல்லூரி, தெய்வானையம்மாள் கலைக்கல்லூரி உட்பட 32 கல்லூரி விளையாட்டுத் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பல்கலைக்கழக அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி முடிவு செய்யப்பட்டது. முன்னதாக கல்லூரி முதல்வர் சபாநாயகத்திற்கு, விளையாட்டுத்துறை சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.