புதன், 25 ஜனவரி, 2012
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கடலூர் மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள்
கடலூர் :
கடலூர் மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் போட்டிகள் இன்று (25/01/2012 - புதன் கிழமை) கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நடக்கிறது.
கடலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் 137 பேர் பங்கேற்றனர். தமிழில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடந்தது.
போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். முதுநிலை தமிழாசிரியர் மஞ்சு வரவேற்றார். இதில் மாவட்டம் முழுவதும் 47 பள்ளிகளில் இருந்து 137 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 10 ஆயிரம், இரண்டாம் பரிசு 7,000 ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதல் பரிசு 15 ஆயிரமும், 2ம் பரிசு 10 ஆயிரமும் வழங்கப்படும்.
லேபிள்கள்:
பெரியார் கலைக் கல்லூரி,
பேச்சுப் போட்டி,
Periyar Arts College
வியாழன், 12 ஜனவரி, 2012
தானே புயல் : கடலூர் மாவட்டத்தில் பெரியார் கலைக் கல்லூரி உட்பட அரசு கல்லூரிகளை சீரமைக்க ரூ.83 லட்சம் நிதி ஒதுக்கீடு
புவனகிரி:
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளை சீரமைக்க ரூபாய் 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். தானேபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பார்வையிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
அப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறுகையில்,
"தானே புயலால் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி, சிதம்பரம், சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. கல்லூரி ஜன்னல் கண்ணாடிகள், காம்பவுண்டு சுவர்கள், மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. இதனை சீரமைக்க 83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார். செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலர் மாரிமுத்து, சேர்மன் கீதா உடனிருந்தனர்.
லேபிள்கள்:
கடலூர் மாவட்டம்,
தானே புயல்,
பெரியார் கலைக் கல்லூரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)