வெள்ளி, 16 டிசம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் அதிகாரபூர்வ இணையத்தளம் தொடக்கம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் அதிகாரபூர்வ இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.  முன்னாள்,  இந்நாள்  மாணவர்கள் அனைவரும் நமது கல்லூரியின் இணையத்தளத்தினை பார்த்து தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தவும். மேலும் எனது இந்த வலைப்பூவிற்கு தொடர்ந்து தங்களது கருத்துக்களயும், ஆதரவினையும் தாருங்கள்.. நமது கல்லூரி மாணவர்கள் எங்கும் எப்போதும் முதலிடத்தில் இருக்க நம்மால் முடிந்த நல்ல தகவல்களை பகிரலாம்..


நட்புடன் 

கடலூர் ரா.கார்த்திகேயன் 


பெரியார் கலைக் கல்லூரியின் அதிகாரபூர்வ  இணையதள முகவரி 


பெரியார் கலைக் கல்லூரியின் இணையதள குழு முகவரி 



பெரியார் கலைக் கல்லூரி முகநூல் முகவரி 




Read more...

வியாழன், 8 டிசம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை ஆண்டறிக்கை 2010-2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை ஆண்டறிக்கை 2010-2011

1. கல்லூரியின் முதல்வர் ( பொறுப்பு) பேராசிரியர் க.ரங்கநாதன் அவர்களைத் தலைவராகவும், வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் க.காந்திமதி அவர்களைத் துணைத் தலைவராகவும், வரலாற்றுத் துறை மூன்றாமாண்டு மாணவர் M.கார்த்தி அவர்கள் மாணவர் செயலாளராகவும் கொண்டு வரலாற்று மன்றத்தின் செயல்பாடுகள் கூடை விடு முறைக்கு பின் கல்லூரி தொடங்கிய நாளில் தொடங்கியது.

2 .கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் தமிழ்ப் பொன்னி அவர்களைச் சிறப்பு விருந்தினராக அழைத்து 08.10.2010 அன்று வரலாற்று மன்றத்தின் துவக்க விழா நடத்தப்பட்டது. "வரலாற்றின் எதிர்காலம்" என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் தமிழ்ப் பொன்னி உரையாற்றினார்




Read more...

வெள்ளி, 2 டிசம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி பேராசிரியருக்கு செம்மொழி தமிழுக்கான இளம் அறிஞர் விருது

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் திரு. கே. பழனிவேலு, M.A, M.phil, Ph.d   செம்மொழி தமிழுக்கான இளம் அறிஞர் விருது மேதகு குடியரசு தலைவர் திருமதி.பிரதீபா பாட்டிலிடமிருந்து பெற்றார்.


Read more...

வியாழன், 1 டிசம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களின் பல்கலைக்கழக தேர்வு சாதனைகள்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களின் பல்கலைக்கழக தேர்வு சாதனைகள் 


          வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கடலூர் பெரியார்  கலைக் கல்லூரி மாணவர்கள் ஏப்ரல் 2010 -ல் நடைபெற்ற பல்கலைக்கழகத் தேர்வில் இளங்கலைப் பொருளாதார பாடத்தில் K . வெங்கடேஸ்வரன் என்ற மாணவர் முதல் இடத்தையும், இளமறிவியல் தொழிற்முறை வேதியியல் பாடத்தில் D. பெருமாள் முதல் இடத்தையும், அதே பாடப் பிரிவில் E .பாலமுருகன் மூன்றாம் இடத்தையும், J. செல்வநாதன் நான்காம் இடத்தையும், M. கார்த்திகேயன் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இளமறிவியல்  பாடத்தில் S. நாகலட்சுமி எட்டாம் இடத்தையும் , முதுநிலை கணிதத்தில் R.முல்லை ஐந்தாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

             ஏப்ரல் 2011-ல் நடைபெற்ற  பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக தேர்வு சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். 



பின் குறிப்பு : கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்திலுள்ள 96 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தினுடன் இணைவு பெற்றுள்ளது.


Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP