கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களின் பல்கலைக்கழக தேர்வு சாதனைகள்
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களின் பல்கலைக்கழக தேர்வு சாதனைகள்
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் ஏப்ரல் 2010 -ல் நடைபெற்ற பல்கலைக்கழகத் தேர்வில் இளங்கலைப் பொருளாதார பாடத்தில் K . வெங்கடேஸ்வரன் என்ற மாணவர் முதல் இடத்தையும், இளமறிவியல் தொழிற்முறை வேதியியல் பாடத்தில் D. பெருமாள் முதல் இடத்தையும், அதே பாடப் பிரிவில் E .பாலமுருகன் மூன்றாம் இடத்தையும், J. செல்வநாதன் நான்காம் இடத்தையும், M. கார்த்திகேயன் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இளமறிவியல் பாடத்தில் S. நாகலட்சுமி எட்டாம் இடத்தையும் , முதுநிலை கணிதத்தில் R.முல்லை ஐந்தாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஏப்ரல் 2011-ல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக தேர்வு சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பின் குறிப்பு : கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்திலுள்ள 96 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தினுடன் இணைவு பெற்றுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக