சனி, 24 செப்டம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கடலூர்:

         இலவச மடிக்கணினி வழங்கக் கோரி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் இரண்டாம் நாளாக நேற்று வகுப்பை புறக்கணித்து, கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

            பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கு  இலவச மடிக்கணினிவழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. பிளஸ் 2 மாணவர்களுக்கு  இலவச மடிக்கணினி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  இலவச மடிக்கணினியை முதுகலை மாணவர்களுக்கும் வழங்கக்கோரி கடலூர் அரசு கலைக் கல்லூரி எம்.காம்., - எம்.எஸ்சி., (முதுநிலை) மாணவ, மாணவிகள் 120 பேர் நேற்று முன்தினம் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

              இரண்டாம் நாளாக நேற்று மாணவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில், முதுகலை மாணவர்களுக்கு ஆய்வுப் பணி (பிராஜக்ட் ஒர்க்) ஒரு பாடப் பகுதியாக உள்ளதால், எங்களுக்கும்
இலவச மடிக்கணினி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். இலவச மடிக்கணினி பெற்றுத் தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more...

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கக் கோரி வகுப்புப் புறக்கணிப்பு

கடலூர்:

      டலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அரசுக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச மடிக் கணினி வழங்குவதாக அறிவித்து உள்ளது. அரசுக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக் கணினி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

              இக்கோரிக்கையை வலியுறுத்தி, கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவர்கள் வியாழக்கிழமை கல்லூரி வாயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற மாணவ மாணவிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து அனைத்து மாணவ மாணவியரும் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரியை விட்டு வெளியேறினர்.

Read more...

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை 2004-2005 மாணவர்களின் சுற்றுலா - புகைப்படங்கள்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை 2004-2005 மாணவர்களின் சுற்றுலா - புகைப்படங்கள்









நன்றி : திரு. அண்ணா துரை  (வரலாற்றுத் துறை 1993-1996)

Email : cuddalore1975@gmail.com 
 


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வணிகவியல் துறை 2000-2003 பிரிவு உபச்சார விழா - புகைப்படங்கள்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வணிகவியல் துறை ‎2000-2003 பிரிவு உபச்சார விழா - புகைப்படங்கள்



இந்த புகைப்படத்தில்: 
Vijayakala , Vijaya , Suganthi , S.Nithya, Radhika , Tamil , M.Nithya, Kavitha , Renuka Tamilarasi



இந்த புகைப்படத்தில்:

Vaithi, Baskaran, Vinoth,  Rajesh


Hockey Inter College Tournament Held In Cuddalore at St.Josephs College, Winners Periyar Arts & Science College Cuddalore.



நன்றி : திரு. பாஸ்கரன்  (வணிகவியல் துறை 2000-2003 )

Contact : 9840140800    , karanshanmugam@gmail.com


Read more...

புதன், 10 ஆகஸ்ட், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வணிகவியல் துறை ஆசிரியர்கள் 2010-2011

 கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வணிகவியல் துறை ஆசிரியர்கள் 2010-2011



1. முனைவர்  த. அறவாழி , M.com., M.Phil., B.Ed., Ph.D துறைத் தலைவர்,  இணைப் பேராசிரியர்.

2. முனைவர் சு. கணேசன், M.com., M.Phil., உதவிப் பேராசிரியர்.
 
3. திரு. தா. திருப்பதி, M.com, M.B.A.,M.Phil., உதவிப் பேராசிரியர்.

4. திரு. மு. ஏழுமலை, M.com, M.B.A., PGDCA, M.Phil., உதவிப் பேராசிரியர்.

5. திரு. சுதாசங்கர், M.A, B.L., வழக்கறிஞர். ( பகுதி நேர விரிவுரையாளர் )

காலிப்  பணியிடங்கள் - நான்கு 

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP