கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
கடலூர்
பெரியார் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. காப்பாளர்
உமாபதி தலைமை தாங்கினார். மூன்றாம் ஆண்டு விடுதி மாணவர் ஏழுமலை வரவேற்றார். கடலூர்
மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ராசகுழந்தைவேலனார், கல்லூரி முன்னாள் மாணவர் அகஸ்டீன் பிரபாகரன் ஆகியோர்
சிறப்புரையாற்றினர். உலக திருக்குறள் பேரவை கடலூர் தலைவர் கவிஞர் ஜெயச்சந்திரன், மாணவர் பேரவை முன்னாள் தலைவர்கள் சோழாமனோகரன், தாஸ் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மூன்றாமாண்டு விடுதி மாணவர்களுக்கு பிரிவு உபசாரமும் நடைபெற்றது. மாணவர்கள் கணேசன், ஜான்டேவிட், ஐயனார், மணிகண்டன், பூவரசன், சத்தியராஜ், வேலவன், வெங்கட், விஸ்வா, இளையராஜா, சக்திவேல், நந்தா, அருள்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக