கடலூா் பொியாா் அரசு கல்லூாியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் 09.02.2016-திங்கள்கிழமையன்று நடைபெற்றது.
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில்
குருதி கொடை முகாம் நடைபெற்றது. கடலூரில் மழை பாதிப்பால் அரசு மருத்துவமனையின்
இரத்த வங்கிக்கு மாவட்ட அளவில் அதிகம் இரத்தம் தேவைப்படுவதாலும் அன்றாடம்
விபத்துகள் ஏற்பட்டு விபத்துக்குள்ளானோரின் உயிர் காக்கும் பொருட்டு இளைஞர்
செஞ்சிலுவைச் சங்க தன்னார்வ மாணவஃமாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் குருதி
கொடையளித்தனர்.
முன்னதாக குருதி கொடையினை கல்லூரி முதல்வர்
வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தலைமையேற்று துவங்கி வைத்தார்கள். முகாமில் பேசிய
முதல்வர் “குருதியானது
சுழற்சிக்கே எனவே குருதிகொடை வழங்குங்கள்” என்ற வாசகத்தை முன்மொழிந்தார். பேராசியர் முனைவர்.கு.நிர்மல்குமார் மாவட்ட
இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் வரவேற்றார்.
பேரா.ம.ஆனந்தராஜ் YRC திட்ட அலுவலர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
முகாமில் கடலூர் அரசு பொது மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் சாய்லீலா மற்றும்
அவரது குழுவினர் கலந்துகொண்டனர். முகாமில் 150-க்கும் மேலான மாணவ மாணவிகள் குருதி
கொடையளித்தனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக