பெரியார் அரசு கலைக் கல்லூரி பொன்விழா தொடர்பாக முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் 11.01.2016 மற்றும் 12.01.2015 பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டம் நடைபெறுகிறது
பெரியார் அரசு கலைக் கல்லூரி ஐம்பதாண்டு கால ஒப்பற்ற உயர்க்கல்வி சேவை புரிந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. தமிழக அரசு கொள்கைக்கு ஏற்ப சமூக நீதியை நிறைவேற்றுவதில் முன்னோடி கல்விக்கூடமாக விளங்குகிறது. இக்கல்லூரி பொன்விழா ஆண்டினை 25.02.2016 முதல் 27.02.2016-வரை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட கல்லூரியின் ஆட்சிக்குழுவினால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் 11.01.2016-ல் திங்கள்கிழமை நடைபெறுகிறது. கல்லூரியில் படித்த முன்னால் மாணவ, மாணவியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொன்விழா ஆண்டிற்கான ஆலோசனைகளை வழங்கலாம். இதனையடுத்து 12.01.2016 செவ்வாய்க்கிழமையன்று காலை 11.00 மணியளவில் பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டம் MLA கட்டடத்தில் நடைபெறவுள்ளது. இக்கல்லூரியில் தற்போது பயின்று வரும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் இக்கூட்டத்திற்கு வந்து அவர்களின் கருத்துகளை பதிவு செய்யலாம் என்று வேண்டப்படுகிறார்கள்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக