வியாழன், 31 டிசம்பர், 2015
புதன், 30 டிசம்பர், 2015
பெரியார் அரசு கலைக் கல்லூரி பொன்விழா தொடர்பாக முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் 11.01.2016 மற்றும் 12.01.2015 பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டம் நடைபெறுகிறது
பெரியார் அரசு கலைக் கல்லூரி ஐம்பதாண்டு கால ஒப்பற்ற உயர்க்கல்வி சேவை புரிந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. தமிழக அரசு கொள்கைக்கு ஏற்ப சமூக நீதியை நிறைவேற்றுவதில் முன்னோடி கல்விக்கூடமாக விளங்குகிறது. இக்கல்லூரி பொன்விழா ஆண்டினை 25.02.2016 முதல் 27.02.2016-வரை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட கல்லூரியின் ஆட்சிக்குழுவினால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் 11.01.2016-ல் திங்கள்கிழமை நடைபெறுகிறது. கல்லூரியில் படித்த முன்னால் மாணவ, மாணவியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொன்விழா ஆண்டிற்கான ஆலோசனைகளை வழங்கலாம். இதனையடுத்து 12.01.2016 செவ்வாய்க்கிழமையன்று காலை 11.00 மணியளவில் பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டம் MLA கட்டடத்தில் நடைபெறவுள்ளது. இக்கல்லூரியில் தற்போது பயின்று வரும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் இக்கூட்டத்திற்கு வந்து அவர்களின் கருத்துகளை பதிவு செய்யலாம் என்று வேண்டப்படுகிறார்கள்.
கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், 21 டிசம்பர், 2015
பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 09.01.2016 அன்று நடைபெறவிருந்த 8-வது பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களால் 08.01.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும்
பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 09.01.2016 அன்று நடைபெறவிருந்த 8-வது பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களால் 08.01.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும். பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற விரும்புவர்கள் வேதியியல் துறைத்தலைவரிடம் 05.01.2015-க்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடலூர் மாவட்ட செய்திகள்
Two days ICMR Sponsored National Conference on Public Health and Hygiene (NCPHH-2016) held on 4th & 5th February-2016
புதன், 16 டிசம்பர், 2015
கடலூர், பெரியார் கலைக் கல்லூரியில் 8-வது பட்டமளிப்பு விழா09.01.2016 (சனிக்கிழமை) காலை 11.00 மணி அளவில் நடைபெறவுள்ளது
கடலூர், பெரியார் கலைக் கல்லூரியில் 19.10.2015 அன்று நடைபெறவிருந்த 8-வது பட்டமளிப்பு விழா கனமழையின் காரணமாக
ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இவ்விழாவானது 09.01.2016 (சனிக்கிழமை) காலை 11.00 மணி அளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு
அழைப்பிதழ் அனுப்பப்பட்ட இளநிலை,முதுநிலை,எம்.ஃபில் மற்றும் பி.எச்டி முடித்த மாணவர்கள்
வேதியியல் துறைத்தலைவர் திருமதி.முனைவர்.ப.ஷர்மிளா இந்திராணி அவர்களிடம் தங்கள்
பெயர்களை உடனடியாக பதிவு செய்யவும். பதிவு செய்வதற்கான கடைசி நாள்: 30.12.2015.
பதிவுக்கட்டணம் ரூ.200/- ஆகும்.
கடலூர் மாவட்ட செய்திகள்
பொியாா் கலைக்கல்லூாியில் தொடா்மழை காரணமாக மாணவா்களை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சாிக்கையாக நிலவேம்பு குடிநீா் (15.12.2015 முதல் 17.12.2015 வரை) வழங்கப்படுகிறது
வெள்ளி, 11 டிசம்பர், 2015
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆணைக்கு இணங்க வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவியர்கள் பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெறும் சான்றிதழ் சிறப்பு முகாமில் விண்ணப்பம் செய்யலாம். இம்முகாம் பெரியார் கலைக் கல்லூரியில் 14.12.2015 முதல் 18.12.2015 வரை நடைபெறுகிறது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆணைக்கு இணங்க வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவியர்கள்
பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெறும் சான்றிதழ் சிறப்பு முகாமில் விண்ணப்பம்
செய்யலாம். இம்முகாம் பெரியார் கலைக் கல்லூரியில் 14.12.2015 முதல் 18.12.2015 வரை நடைபெறுகிறது.
விண்ணப்பம் செய்ய விழைவோர் கிராம நிர்வாக அதிகாரியிடம் பாழ்பட்டது அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என்ற சான்றிதழை கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்த ஒரு வாரத்தில் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்படும். இச்சான்றிதழ்களை பெற்றுத் தருகின்ற பிரதிநிதியாக பேராசிரியர்கள் முனைவர்.கு.நிர்மல்குமார் (94436 01496) தாவரவியல் துறை மற்றும் முனைவர்.ரா.ராஜகுமார் (93455 12405) விலங்கியல் துறை பணிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சான்றிதழ்கள் விண்ணப்பத்தோடு இணைத்துக்கொடுத்தும் நகல் சான்றிதழ்களை பெறலாம். இச்சேவைக்காக பெரியார் அரசு கலைக் கல்லூரி மாலை 06.00 மணி வரை செயல்படும்; மேலும் இதற்காக எந்த கட்டணமும் வசு10லிக்கப்பட மாட்டாது என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)