பொியாா் கலைக் கல்லூாியின் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு மாணவா்கள் பேரணி 01.10.2015 -வியாழக்கிழமை காலை 09.00 மணியளவில் நடைபெற்றது
மக்களாட்சியின் அடிப்படை காலந்தோரும் மக்கள் பங்கேற்கும் தேர்தல் உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி இந்தியா. வருகின்ற தேர்தல் காலங்களில் அதிகமாக வாக்காளர் பங்கேற்புக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்வதில் தேர்தல் குழுவின் பரிந்துரையின் பேரில் விழிப்புணர்வு பேரணி மாவட்டந்தோரும் நடைபெறும்.
கடலூர் மாவட்டத்தின் கீழ்க்கண்ட செய்திகள் அடங்கிய விழிப்புணர்வை 01.10.2015- அன்று காலை 09.00 மணியளவில் அரசியல் அறிவியல் துறையின் சார்பில் நடைபெற்றது. இப்பேரணியானது கடலூர் மாவட்டர் ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் அவர்கள் கொடியை அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் கல்லூரி முதல்வர்.வ.நா.விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
இப்பேரணியில் கல்லூரியின் மாணவ/மாணவிகள் கீழ்க்கண்ட செய்திகள் அடங்கிய விழிப்புணர்வை பதாகைகளை ஏந்தி வாயில் வழியாக கோஷமிட்டும் வாக்களிப்பதின் அவசியத்தை பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
1. வாக்களிப்பது ஜனநாயக கடமை
2. வாக்குரிமை நமது உரிமை
3. மற்ற உரிமைகளை பெற அளித்திடுவோம் வாக்குரிமை.
4. மக்களாட்சியின் பெருமை நாம் அளிக்கும் வாக்குரிமை.
5. மறக்காதே! மறக்காதே! வாக்களிக்க மறக்காதே!
6. வாக்களிப்போம் வளமான இந்தியாவை பெறுவோம்.
7. விற்காதே! விற்காதே! வாக்குகளை விற்காதே!
8. வாக்காளர் என்பதில் பெருமை கொள்வேன்! வாக்களிக்க தயார் என்பேன்!
9. நீங்கள் விரும்பும் மாற்றம் உங்களிடமிருந்து தொடங்கட்டும்!
10. உங்கள் வாக்கு… உங்கள் சக்தி…வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்!
11. நல்வாழ்க்கைக்கு வாக்களி! வாக்களித்தால் வாழ்வு கிட்டும்.
12. மக்களாட்சியின் இதயமே வாக்குச்சாவடிமறக்காமல் செல்வோம் மதிப்போம்! பதிவு செய்வோம் வாக்கினை.
13. உன் வாக்கு உன் உரிமை உரிமைக்கு மதிப்பளி
பெரியார் அரசு கல்லூரியின் பேரா.ஆர்.ரவி ஆங்கிலத்துறைத்தலைவர் பேரா.வி.இராயப்பன் வரலாற்று துறைத்தலைவர் மற்றும் தேர்தல் அதிகாரியான பேரா.கி.செந்தில்குமார் முனைவர்.ப.இளவரசன் அரசியல் அறிவியல் துறை பேராசியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இப்பேரணியானது கடலூர் நகர அரங்கில் தொடங்கப்பெற்று பிரதான சாலை வழியாக உழவர் சந்தை வரை சென்று நிறைவடைந்தது.
தினமலா் 02.10.2015 |
தினமலா் 02.10.2015 |
தினத்தந்தி 02.10.2015 |
தினத்தந்தி 02.10.2015 |
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக