பாரத ரத்னா டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 15.10.2015 வியாழக்கிழமையன்று தமிழக அரசின் ஆணைக்கிணங்க
பாரத ரத்னா டாக்டர். ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி
நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. 15.10.2015 அன்று காலை 09.00 மணிக்குக் கல்லூரி வளாகத்திலிருந்து மாவட்ட
ஆட்சித்தலைவர் பழைய அலுவலகம் வரை இளைஞர் எழுச்சி பேரணி நடைபெற்றது.
இப்பேரணியைக் கல்லூரின் முதல்வர் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். பேரணி கடலூர் புதுப்பாளையம் வழியாக மாவட்டத் தலைவர் பழைய அலுவலகத்தைச் சென்றடைந்தது. பேரணியில் மாண்பு மிகு தமிழக முதல்வரின் தொலைநோக்குத் திட்டம் 2023 யினை வெளிப்படுத்தும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். பேரணியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் கே. பழனிவேலு திரு. சந்திரசேகரன் முனைவர் ந. பாஸ்கரன் திரு. சிவசண்முகராஜா ஆகியோர் வழிநடத்திச் சென்றனர். இப்பேரணியில் கல்லூரிப் பேராசிரியர்களும் மாணவர்களும் நாட்டு நலப்பணித்திட்டத் தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

15.10.2015 அன்று மதியம் 2 மணிக்குப் பெரியார் கலைக்கல்லூரியின் அண்ணா
நூற்றாண்டு விழாக் கட்டடத்தில் இளைஞர் எழுச்சி நாள் விழா
கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. தமிழாழி கொற்கை
வேந்தன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர்(பொ.)க.மனோகரன்
தலைமை தாங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது
நிர்வாகத்துறைப் பேராசிரியர் முனைவர் ச.பாலமுருகன் அப்துல்கலாமின் செயல்பாடுகள் சிறப்புகள் பணிகள் அவர்
மாணவர்களுக்கும் நாட்டுக்கும் ஆற்றிய சேவைகளைப் பற்றி விரிவாகச்
சிறப்புரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவர் முனைவர்.கே.பழனிவேலு
நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள்
திரு.சந்திரசேகரன் முனைவர் ந. பாஸ்கரன் திரு. சிவசண்முகராஜா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்;. விழாவில் கல்லூரி மாணவர் அனைவரும் பங்கேற்று
அப்துல் கலாமின் சிறப்புகளை அறிந்துகொள்வதன் மூலம் எழுச்சி பெற்றனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்