கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் புதிதாக 23 பாடப்பிரிவுகளை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு விண்ணப்பபடிவங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் புதிதாக 23 பாடப்பிரிவுகளை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு விண்ணப்பபடிவங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
தினத்தந்தி 06.09.2015 |
கல்லூரி முதல்வர் பேசுகையில், கல்லூரியில் கூடுதல் வகுப்பு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அதை ஏற்றுக்கொள்கிறேன். அதன்படி புதிய கட்டிடம் கட்ட 25 லட்சம் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
முன்னதாக நகரசபை தலைவர் ஆர்.குமரன், துணைத் தலைவர் சேவல்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். கணினி துறை தலைவர் கீதா, தமிழ்துறை தலைவர் தமிழாழி கொற்கைவேந்தன் ஆகியோர் பேசினார்கள். விழாவில் கவுன்சிலர்கள் வி.பழனிசாமி, தமிழ்செல்வன், பஞ்சாயுதபாணி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இயற்பியல்துறை தலைவர் மனோகரன் நன்றி கூறினார்.
இதன் தொடக்கவிழா கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் நா.விஸ்வநாதன் வரவேற்று பேசினார். விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு புதிய பாடப்பிரிவுகளை தொடங்கிவைத்து, 4 மாணவர்களுக்கு விண்ணப்பப்படிவங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
தொடக்க விழா
கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக பி.எஸ்.சி. காணொலி தொடர்பியல், எம்.ஏ.பொதுநிர்வாகம், முதுநிலை சமுகசேவையியல்(எம்.எஸ்.டபிள்யூ.) ஆகிய 3 பட்டப்படிப்புகளும், மற்றும் பல்வேறு பாடப்பிரிவுகளில் 20 பகுதிநேர மற்றும் முழுநேர எம்.பில்., பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.
கூடுதல் கட்டிடம்
பெரியார் அரசு கலைக்கல்லூரியில் ஒரேநாளில் அதுவும் ஆசிரியர் தினத்தில் புதிதாக 23 பாடப்பிரிவுகள் தொடங்கி இருப்பது மிகவும் சிறப்புடையதாகும். தனியார் கல்லூரிகளில் இருக்கக்கூடிய பி.எஸ்.சி.காணொலி தொடர்பியல் பாடப்பிரிவு போன்ற படிப்புகளும் தொடங்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதாகும். இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள், ஒரே குறிக்கோளுடன், காலத்தை உணர்ந்து, குறிப்பிட்ட நேரத்துக்கு கல்லூரிக்கு வந்து, பெற்றோரின் அறிவுரையை ஏற்று, ஆசிரியர் கற்றுத்தரும் பாடங்களை நன்கு கவனித்து படித்து நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.
கல்லூரி வளர்ச்சி நிதி
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக